கொள்கைளில் முரண்படும் தலைமையமைச்சர் மோடி


முத்தலாக் விவகாரம் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான பிரச்சனை என்றும் சபரிமலை விவகாரம் அந்த கோயிலின் பாரம்பரியம் சார்ந்தது என்றும் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

 

பாரம்பரியம் ஆண் பெண் சமத்துவதற்கு எதிராக அமைந்தால், அப்படியே தொடர அனுமதி அளிப்பதுபோல கருத்து தெரிவித்துள்ளதால், மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுளள்ளது.

 

முத்தலாக் சட்டம் தொடர்பாக ஐஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த போட்டியில், முத்தலாக் விவகாரத்தை பொறுத்தவரை கடந்த தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிபிட்டுள்ளதாகவும், அந்த பிரச்சனை ஆண் - பெண் சமத்துவம் தொடர்பானது மோடி தெரிவித்துள்ளார்.

 

முஸ்லிம் நாடுகள் சிலவற்றிலும் இது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சனையில் மத விவகாரம் இல்லை. இது தொடாபாக சட்டரீதியான தீர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம் என்று நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

 

சபரிமலை தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர்,  நாட்டில் பல்வேறுபட்ட கோயில்களில் வேறுபட்ட மரபுகள் பின்பற்றப்படுகின்றன. ஆண்கள் செல்ல முடியாத அல்லது செல்லாத கோயில்களும் உள்ளன. இந்த விவகாரத்தில் மாறுபட்ட தீர்ப்பளித்த பெண் நீதிபதி இதனை தெளிவு படுத்தியுள்ளார். இது கோயில் பாரம்பரியம் சார்ந்தது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.

 

உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகளில் பெரும்பான்மையினர் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக நாட்டின் தலைமையமைச்சரே அறிவித்திருப்பது பரவலான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Add new comment

3 + 16 =