கொல்லப்பட்ட காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்


எகிப்தில் கொல்லப்பட்ட 7 காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது தீடீரென தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அரசு என்கிற தீவிரவாதிகள், 7 பேரை கொன்றதோடு, 19 பேரை காயமடைய செய்தனர்.

 

கிறிஸ்தவர்கள் என்பதால் மட்டுமே கொல்லப்பட்டவர்களுக்கான செபிக்றேன். இறந்தோரின் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த காப்பிடிக் இறைசமூகத்திற்கும் தூய அன்னை மரியாள் ஆறுதல் அளிக்க வேண்டுமென திருத்த்நதை செபித்து்ளளார்.

 

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 6 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.

 

இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்கிற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Add new comment

5 + 13 =