Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கொல்லப்பட்ட அருட்தந்தைக்கு 3 ஆண்டுகளுக்கு பின் இறுதி சடங்கு
செயற்பாட்டாளராக மாறிய கத்தோலிக்க அருட்தந்தையின் உடல் அவர் இறந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் புதைக்கப்பட்டு்ளளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்புக்கின்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போரடியதால், அவர் கொல்லப்பட்டதாக குடும்பத்தினரும், நண்பாகளும் இந்நாள் வரை அவரது உடலை அப்படியே பாதுகாத்து வந்தனர்.
முன்பு போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்த கோவா மாநிலத்தின் சாவ் எஸ்டவாம் கிராமத்தில் நவம்பர் 6ம் தேதி மறைந்த அருட்தந்தை ஜோஸ் பிஸ்மார்கியு டிசிடோர் டயஸூக்கு நடைபெற்ற இறுதி சடங்கில் 60 அருட்தந்தையரும், இரண்டாயிரம் பேரும் கலந்து கொண்டனர்.
அவரது மர்மமான இறப்பு தொடர்பாக விவரமான புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறி அவருடைய நண்பர்களும், குடும்பத்தினரும் முந்தைய திவ்விய அருட்சாதன அருட்தந்தையின் இறுதி சடங்கை தாமதப்படுத்தி வந்தனர்.
51 வயதான டையஸ் 2015ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் நீச்சலுக்கு சென்றபோது காணாமல் போய்விட்டார்.
2 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் நீரில் மிதந்தது. அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்று உள்ளூர் காவல்துறை தெரிவித்தது.
இருபபினும், சுரங்க அகழ்வு மற்றும் தடையற்ற சொத்து வளர்ச்சிக்கு எதிராக அவர் நடத்தி வந்த பரப்புரைக்கு எதிரானவாகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு, இது தொடர்பாக புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி இறுதி சடங்கை தாமதப்படுத்தி வந்தனர்.
இந்த அழுத்தத்திற்கு உட்பட்டு கோவா மாநிலத்தையும் உள்ளடக்கும் மும்பை உயர் நீதிமன்றம், அதனை கொலையாக வழக்கு பதிவு செய்து புலனாய்வு மேற்கொள்ள ஆணையிட்டது.
2018ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த அருட்தந்தை தண்ணீரில் மூழ்கிதான் இறந்துள்ளார் என்று இந்த புலனாய்வு குழுவினர் அறிக்கை சமாபித்தனர்.
அவரது உடல்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது நீதிக் எழுச்சி அடக்கம் செய்யப்படவில்லை. மறைந்துவிட்ட நமது தோழர் மேற்கொண்ட போராட்டம் தொடரும் என்று நீதிமன்ற தலையீடு வேண்டும் என்று கோரிய டையஸின் சாகா சுதிப் டால்வி தெரிவித்துள்ளார்.
Add new comment