கொலையுண்ட பாகிஸ்தானிய கத்தோலிக்கருக்கு திருத்தந்தை அஞ்சலி


சபாஷ் பாத்தியின் சாட்சியத்தை நினைவுகூர்கையில், இந்த பாகிஸ்தானிய கத்தோலிக்கர் கொலையுண்டது சித்ரவதை செய்யப்படும் கிறிஸ்தவர்களுக்கு தூண்டுதல் மற்றும் நம்பிக்கையின் ஊற்றாக அமைந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

சபாஷ் பாத்தி சேவை கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த குழு தடைகளை தகர்த்து, வேறுபட்ட மக்களிடமும், வித்தியாசமான இறைநம்பிக்கை உடையோரிடமும் உரையாடல், புரிதல் மற்றும் ஒப்புரவை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 

உங்களை போன்ற குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் அதிகமாக உருவாவதுதான் துன்புறும் கிறிஸ்தவர்களால் உருவாகும் பயனாகும். இத்தகைய குழுக்களால் மொழி, கலாசாரம், மதம் என்ற வேறுபாடுகளை களைந்து உலக நாடுகள் முழுவதும் சகோதரத்துவ பாலம் அமைக்க முடியும் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

 

குற்றமறியாத கிறிஸ்தவர்களுக்கு தண்டனை அளிக்க தவறாக பயன்படுத்தாமல் இருக்கும் வகையில், தெய்வ நிந்தனை சட்டம் திருத்தம் செய்ய முய்றசி எடுக்கப்போவதாக கூறிய பின்னர், 2011ம் ஆண்டு பாகிஸ்தான் சிறுபான்மை விவகார அமைச்சர் பாத்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இன்று அவர் பலராலும் அன்பு செய்யப்படுகிறார், மதிப்பளிக்கப்படுகிறார் என்று அறிய வந்தால் நெகிழ்ந்துபோவார் என்றும், அவரது தியாகம் நம்பிக்கைக்கான பயன்களை அளித்து வருவதாகவும் கூறி திருத்தந்தை பிரான்சிஸ் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

Add new comment

8 + 2 =