Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கைவிடப்படப்படும் பழைய கிலோ அளவு: வருகிறது புதிய முறை
ஒரு கிலோ எடையைக் கணக்கிடும் புதிய முறையை சர்வதேச அறிவியலாளர் கூட்டமைப்பு மாற்றி அமைத்துள்ளது.
உலகம் முழுவதும் ஒரு கிலோ எடையைக் கணக்கிட பயன்படுத்தப்படுகின்ற எடைக்கல் எவ்வளவு எடை கொண்டிருக்க வேண்டும் என்பதை சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளின் அமைப்பு நிர்ணயித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
பிளாட்டினம் 90 சதவீதம, இரிடியம் 10 சதவீதம் கலந்த உலோக உருளை என ஒரு கிலோவின் மாதிரி எடையாக பாரிஸ் நகரில் இந்த அமைப்பு வைத்துள்ளது. இதன் பெயர் ‘கிராண்ட் கே’ எனப்படுகிறது.
இதிலுள்ள பருப்பொருட்கள் காற்று, வெப்பம் போன்றவற்றின் பாதிப்புக்களால் சுற்றிலும் உள்ள அணுக்களை ஈர்த்தோ அல்லது தனது அணுக்களை இழந்தோ, எடை கூடவோ குறையவோ செய்யும்.
இதன் காரணமாக, மாதிரி எடையான ‘கிராண்ட் கே’ உருளை எடை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட மணி வடிவ கண்ணாடிக் கூண்டுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த உருளையின் எடைதான் ஒரு கிலோ என 1885ஆம் ஆண்டு முதல் முதலாக நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், சுமார் 130 ஆண்டுகள் கழிந்த நிலையில், ‘கிராண்ட் கே’ உருளையின் எடை குறைந்துள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்பினுள் இருந்தாலும் 10 மைக்ரான் எடை குறைந்துள்ளது.
ஒரு கிலோ எடையின் முன்மாதிரி எடைக்கல்லே, இத்தகை பாதுகாப்புக்குள் இருக்கும் நிலையில், இப்படி எடை மாறுகிறது.
எனவே நாம் இதுவரை கடைபிடித்து வரும் ஒரு கிலோ எடைக்கல் துல்லியான ஒரு கிலோ எடை இல்லை என்று சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளின் அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது.
ஒரு ‘பொருள்’ மூலம் கிலோ அளவை நிர்ணயம் செய்யாமல் “அறிவியல் மாறிலிகள்” அடிப்படையில் எடையைக் கணக்கிட இந்த கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
பாரிஸ் அருகே உள்ள வெர்சைல்ஸ் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளின் அமைப்பின் கூட்டத்தில் ஒரு கிலோ எடையை அளவிட குவாண்டம் இயற்பியலின் மாறிலிகளில் ஒன்றான பிளாங்க் மாறிலியை வைத்து கணக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறையில் எடையைக் கணக்கிடுவதற்கு எடைக்கல் எதுவும் தேவைப்படாது என்பது குறிப்பிடத்கதக்கது.
இந்த அளவீட்டுக்கு கிப்பில் சமநிலை தராசு போன்ற எடை காணும் கருவியை பயன்படுத்தலாம்.
சாதாரண தராசைப் போலவே தோன்றும் இரு பக்கங்களைக் கொண்ட கிப்பில் தராசின் ஒரு பக்கத்தில் மின்காந்தம் ஒன்று இருக்கும். மற்றொரு பக்கத்தில் எடை காண வேண்டிய பொருள் வைக்கப்படும். இரண்டு பக்கங்களும் சமநிலையை எட்டும் வரும் வரை மின்காந்தத்தில் மின்சாரம் செலுத்தப்படும்.
ஒரு கிலோ எடை காணும் இந்த புதிய முறை வரும் 2019ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றாட பயன்பாட்டில் ஒரு கிலோ எடை காண இந்த புதிய முறை பயன்படாவிட்டாலும், துல்லியமாக எடை காண வேண்டிய தொழில்துறைகளுக்கு இது மிகவும் பயன்படும்
Add new comment