கேரள திருச்சபை சட்டம் அரசியல் ரீதியான புரளி – திருச்சபை அதிகாரி


திருச்சபையின் சொத்து நிர்வாகத்தையும், பிற சொத்துக்களையும் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்ட புதிய சட்டத்திற்கு கம்யூனிஸ்ட் மாநில அரசு ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு திருச்சபை குழுக்களின் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

 

கேரளா திருச்சபை மசோதா 2019 பற்றிய சட்டவரைவை தாங்கள் தொடர போவதில்லை என்று மாநிலத்தை ஆளுகின்ற இந்திய மார்க்சிஸ்ட் கட்சி அரசு மார்ச் முதலாம் தேதி அறிவித்தது.

 

இந்த சட்ட வரைவு பற்றி ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளன என்று இந்த கட்சியின் மாநில செயலர் கோடியரி பாலகிரு்ணன் தெரிவித்துள்ளார்.

 

இது பொய்யானது, அரசியல் ரீதியாக எடுத்துகொள்ளப்பட்டது என்று மாநில கத்தோலிக்க ஆயர்களின் செய்தி தொடர்பாளர் அருட்தந்தை வாக்கீஸ் வாலிக்காட் தெரிவித்து்ளளார்.

 

இது தொடர்பாக பொது மக்கள் கருத்து கூறலாம் என்று கேரளா சட்ட சீர்திருத்த ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து போராட்டங்கள், கையெழுத்து வேட்டை, அறிக்கைகள் என தொடர் எதிர்ப்பு இதற்கு தெரிவிகக்ப்பட்டதால், மாநில அரசு இந்த முயற்சியை கைவிட்டுள்ளது.    

Add new comment

15 + 2 =