கேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க ஆளுநர் உத்தரவு


இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு தொடா்பாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிக்கை அளிக்க வேண்டுமென ஆளுநா் சதாசிவம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 பெண்கள் வழிபாடு நடத்தியதற்கு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.

 

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.

 

சாமி தரிசிக்க வந்த பெண்கள் பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாமல் மாநில அரசு திணறிய நிலையில்,  

 

புதன்கிழமை அதிகாலையில் 50 வயதிற்கு குறைவான இரண்டு பெண்கள் பலத்த காவல் பாதுகாப்புடன் ஐயப்பன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனா்.

 

இதனால் கேரளாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.  சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது.

 

இந்த பின்னணியில், ஆளுநர் சதாசிவத்தின் இந்த அறிக்கை தாக்கலும் வந்துள்ளது. 

Add new comment

17 + 0 =