கேரளாவிற்கு இந்திய நடுவண் அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு


இந்திய நடுவண் அரசு கேரள மாநில அரசுக்கு பாரபட்சம் காட்டுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்குவதில் தாமதம் காட்டி வருவதால் இந்த குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார்.

 

தென்மேற்கு பருவமழையின்போது, கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை, வெள்ளத்தால் பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மூழ்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள்.

 

ரூ.30 ஆயிரம் கோடிக்கு அதிகமாகச் சேதங்கள் ஏற்பட்டதாகக் கேரள அரசு தெரிவித்தது.

 

இதற்கு முதல் கட்டமாக மத்திய அரசிடம் இருந்து ரூ.600 கோடி நிதியுதவி மட்டுமே அளிக்கப்பட்ட பினன்ர் எந்த நிதியும் வழங்கவில்லை என்று பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளித்தபோது இதனை தெரிவித்துள்ளார்.

 

வெள்ளப்பெருக்கு நேரத்தில் கேரள மாநிலத்துக்கு அரசியும், மண்ணெண்ணையும் வழங்கியது. அதற்கான மத்திய அரசுக்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.265 கோடியை மத்திய அரசுக்கு மாநில அரசு அளிக்க வேண்டும்.

 

எனவே, மொத்தமான ரூ.600 கோடியில், எங்களுக்கு ரூ.350 கோடி மட்டுமே கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

கேரள மாநிலம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டபோது, உலகமே இரக்கம் காட்டியது. ஆனால், மத்திய அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Add new comment

9 + 3 =