கூக்குரலாக ஒலிக்கும் ஏழைகளின் அழுகை – திருத்தந்தை


பணக்காரர்கள் இன்னும் அதிகமாக செல்வந்தராக மாறி வருகையில், ஏழைகளின் துன்பமும், அழுகையும் ஒவ்வொரு நாளும் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

எழைகளை கண்டுக்கொள்ளாமல் இருக்குகின்ற அல்லது அவர்களுக்கு உதவி செய்யாமல் இல்லாமல் விடப்படுபவர்களாக கிறிஸ்தவர்களாகிய நாம் இருக்க முடியாது என்று திருத்தந்தை மறையுரையில் தெரிவித்துள்ளார்.

 

இறை நம்பிக்கையாளர்களாக, இயேசுவைபோல நாம் நமது கரங்களை விரித்து அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். எழைகளுக்கு சுதந்திரமாக, அன்பாக உதவிகளை கொடுக்க வேண்டும்.

 

புனித பேதுரு பசிலிக்காவில் 6 ஆயிரம் எழைகள் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்ட திருப்பலியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

 

அன்றைய நாளில் திருப்பலிக்கு பிறகு, மூவேளை செப நேரத்தில் ஆயிரத்து 500 பேருக்கு வழங்கிய மதிய விருந்தில் திருத்தந்தையும் கலந்து கொண்டார்.

 

ரோம் நகரை சுற்றி இருக்கும் பங்குகள், பள்ளிகள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அனைத்தும் பல உதவி பணிகளையும், உணவு உதவியும் வழங்கின.   

Add new comment

1 + 4 =