குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கு கடும் நடவடிக்கைகள் - திருத்தந்தை


குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் உறுதி அளித்துள்ளார்.

 

சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வத்திகானில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் பேசியபோது திருத்தந்தை இதனை தெரிவித்துள்ளார்.

 

பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் "சாத்தானின் கருவிகளாக" இருப்பதாக கூறிய திருத்தந்தை, ஒவ்வொரு வழக்கும் தீவிரமாக விசாரிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

 

தற்போது நடைபெற்று வரும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்கள், பேகன் என்னும் பழங்காலத்தில் பிற தெய்வங்களோடு நம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை தனக்கு நினைவூட்டுவதாக திருத்தந்தை மேலும் கூறினார்.

 

மறைமாவட்ட திருச்சபையிலுள்ள பல்வேறு விதிமுறைகளை ஆய்வு செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் வலுவான நடவடிக்கைகளை ஆயர்கள் எடுக்க வேண்டும் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

Add new comment

4 + 7 =