குடும்பத்தை எப்போதும் பாதுகாத்து, தற்காத்து கொள்ளுங்கள் – திருத்தந்தை


குடும்பம் ஒரு பொக்கிஷம். அதனை எப்போதும், பாதுகாத்து, தற்காத்துகொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

திருகுடும்ப பெருநாளில் மூவேளை செபத்தின்போது, அதிக அன்பால் இணைந்து, கடவுளின் மீதான நம்பிக்கையால் வழிநடத்தப்பட்ட ஜோசப், மரியாள், இயேசுவின் அனுபவத்தை பற்றி சிந்தனை வழங்கியபோது, திருத்தந்தை பிரான்சிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

 

12 வயதில் காணாமல்போன இயேசுவை பற்றிய நற்செய்தி பகுதி தொடர்பாக திருத்தந்தை சிந்தனை வழங்கினார்.

 

எல்லாவற்றையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மனப்பான்மைக்கு எதிரானது குணம்தான் ஆச்சரியமும், வியப்பும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

ஆச்சரியமடைவது என்பது பிறருக்கு நம்மை திறப்பதையும், அடுத்தவர்களின் காரணங்களை புரிந்து கொள்வதையும் குறிக்கிறது.

 

இதுதான் குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீாவதற்கு முக்கிய மனப்பான்மையாக அமையும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.  

Add new comment

10 + 5 =