குடிமக்கள் திருத்த மசோதா தோல்வி


குடிமக்கள் திருத்த மசோதாவில் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளில் இந்திய அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

 

இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இந்தியக் குடிமக்களாக் சேர்த்து கொள்கின்ற வழிமுறைகளை இந்த சட்டத்திருத்தம் எளிதாக்க வழிசெய்கிறது.

 

குடிமக்கள் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவானது, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 1985ஆம் ஆண்டு அசாம் ஒப்பந்தத்தை அழித்துவிடும் என அஸ்ஸாம் பகுதி மக்கள் கருதுவதால், இதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

 

வெளிநாடுகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற மத சிறும்பான்மையினருக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என இதனை ஆதரிப்போர் கருத்து தெரிவித்தனர்.

 

என்றாலும், புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகமாகும் என வட கிழக்கு இந்திய மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

 

இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று இதனை எதிர்ப்போர் கூறுகின்றனர்.

 

இந்த மசோதாவைக் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி 11 கட்சிகளின் பிரதிநிதிகள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரைச் சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

 

1955-ல் உருவான குடியரிமைச் சட்டம் 2016-ல் திருத்தப்பட்டு, குடியரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Add new comment

2 + 9 =