கிறிஸ்து பிறப்பு விழா - உத்தர பிரதேச கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு


இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கி வருவதையொட்டி, உத்தர பிரதேசத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசை கிறிஸ்தவ குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

 

இந்த மாநிலத்தில் நிகழ்ந்துள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு பிறகு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற இந்த வேண்டுகோள் வந்துள்ளது.

 

இந்து மதத்திற்கு ஆதரவு அளிக்கின்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 44 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

 

இது இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களில் நிகழ்ந்துள்ள சம்பவங்களை விட அதிகமாகும் என்று தெரிவிக்கும் ஆவணம் ஒன்றை இந்தியாவின் மறைபரப்பு சகோதரத்திற்கான மத விடுதலை ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கி வருவதால், தேவாலயங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க்பபடுவதை உத்தர பிரதேச மாநில முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

 

அதன் மூலம்தான் இந்த கிறிஸ்தவ சமூகம் இந்த அன்பின் விழாவை உலக அமைதி நிலவும் என்ற நம்பிக்கையோடு கொண்டாட முடியும் என்று இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

220 மில்லியன் வாழும் உத்தர பிரதேசத்தில் 0.18 விழுக்காடு என்ற மிகவும் சிறுபான்மையினராக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து உள்ளனர்.  

Add new comment

4 + 7 =