கிறிஸ்து பிறப்பு விழாவின்போது தேவாலயங்களுக்கு பாதுகாப்பு


வரயிருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின்போது, தேவாலயங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மும்பை தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் முறையீடு வைத்துள்ளது.

 

கிறிஸ்து பிறப்பு விழாவின்போது பட்டாசுகளை பயன்படுத்த வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனவும் அது கோரிக்கை வைத்துள்ளது.

 

கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முன்தைய நாள் இரவு 12 மணி வரை பட்டாசுகளை பயன்படுத்த துணை நீதிமன்றம் ஒன்று சமீபத்தில் அனுமதியளித்து என்று ஹார்மனி பவுண்டேஷன் தலைவர் ஆபிரகாம் மதாய் தெரிவித்தார்.

 

பட்டாசு வெடிப்பது கிறிஸ்து பிறப்பு விழாவின் பாரம்பரியம் அல்ல என்று தெரிவித்திருக்கும் அவர், அதற்கு மாறாக, தேவாலயங்களுக்கு பார்காப்பும், வழிபாட்டிற்கு வருகின்ற மக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புமே முதன்மையானது என்று தெரிவித்துள்ளார்.

 

2017ம் ஆண்டு தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட 384 வன்முறை தாக்குதல்களில் 15 தேவாலயங்கள் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது நடத்தப்பட்டுள்ளன.

 

இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சனையாக மாறி வருகிறது என்று மதாய் தெரிவித்து்ளளார்.

Add new comment

15 + 4 =