கிறிஸ்து இல்லாமல் திருச்சபை பணிகள் என்னவாகும்?


கிறிஸ்து இல்லாமல் திருச்சபையின் பணிகள் அனைத்தும் சமூக நல செயல்பாடுகள் ஆகிவிடும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

இயேசு கிறிஸ்துவோடு கத்தோலிக்கராக ஒருவர் செய்கின்ற பணி இணைந்திராவிட்டால், திருச்சபை அழைக்கப்பட்ட பணியாக அது இருக்காது என்று திருத்தந்தை பிரான்சிஸ் துறவற அருட்சகோதரர்கள் குழு ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

 

திருச்சபையிலுள்ள ஒவ்வொரு பணிகளையும் நாம் மறந்துவிட வேண்டாம். திரட்சை கொடியின் கிளைகளைபோல உயிர்த்த கிறிஸ்துவோடு நாம் இணைந்திருக்கிறோம். இல்லாவிட்டால் நாம் செய்வது சமூக நல பணிகளாகிவிடும் என்று திருத்தந்தை பிரானசிஸ் கூறியுள்ளார்.

 

எனவேதான், கிறிஸ்துவோடு இணைந்திருக்க அறிவுறுத்துவதாக திருத்தந்தை பிரானசிஸ் கூறியுள்ளார்

Add new comment

2 + 4 =