கிறிஸ்தவ மறைசாட்சிகளுக்கு பிலிப்பீன்ஸ் மக்கள் மரியாதை


உலக அளவில் சித்ரவதை செய்யப்படும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் விதமாக நவம்பர் 28ம் தேதி பிலிப்பீன்ஸிலுள்ள கத்தோலிக்க தோவலய முகப்புகளும், பள்ளிகளும் சிவப்பு விளக்குகளால் ஒளிர்ந்தன.

 

இந்த நிகழ்வு, சித்ரவதையால் துன்ப்பபடும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு ஆதரவு அளிக்கின்ற திருத்தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் உலக கத்தோலிக்க குழுவான திருச்சபையில் தேவையில் உழல்வோருக்கு உதவி அளிக்கும் நிறுவனம் மேற்கொண்ட ‘சிவப்பு புதன்’ விழிப்புணர்வின் ஒரு பகுதியாகும்.

 

தலைநகர் மணிலாவில் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட அருட்தந்தை டெரிசிட்டோ சிடே சோனானுப் கிறிஸ்தவ மறைசாட்சிகளுக்கு  மரியாதை செலுத்தும் விதமாக இறைமக்களின் செப வழிபாட்டை வழிநடத்தினார்.

 

தான் பயண கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அனுபவத்தால், இந்த நிகழ்வுக்கு தீவிர உணர்வுபூர்வமாக ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

 

செபம் இல்லாமல் நாம் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.  

Add new comment

3 + 12 =