கிறிஸ்தவ திருமணங்களை பதிய சொல்லும் பாகிஸ்தான் மாகாணம்


பாகிஸ்தானில் அதிக மக்கள் வாழுகின்ற மாகாணமான பஞ்சாபில் நழடபெறும் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தின் திருமணங்களை பதிய செய்ய வேண்டுமென அந்நாட்டு உயரிய நீதிமன்றம் ஆணையிட்டு்ளளது.

 

லாகூரின் “த ரெசுரக்சன்” என்கிற ஆங்கிலிக்க கத்தீட்ரல் தேவாலயத்தின தலைவரான ஊழியர் ஷாஹித் பி. மிராஜ் தொடுத்த புகாருக்கு பதிலளிக்கும் படியாக உச்ச நீதிமன்றம் 17 பக்க ஆணையை வழங்கியுள்ளது.

 

பஞ்சாப் யூனியன் கவுன்சில்கள் மற்றும் தேசிய தரவு தள மற்றும் பதிவு நிறுவனத்தோடு கிறிஸ்தவ திருணமங்களை பதிவு செய்வதில் பிரச்சனைகளை கிறிஸ்தவ சமூகம் எதிர்கொள்வதாக இந்த புகார் அளித்தவர் தெரிவித்திருந்தார்.

 

பெஷாவரில் கத்தோலிக்க தேவாலயத்தில் குண்டு தாக்குதல் நடததிய செப்டம்பர் 2013ம் ஆண்டு வழக்கு விசாரணையின்போது, இந்த விடயம் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவரப்பட்டது.

 

சிறுபான்மை சமூகத்தின் மீது நடத்தப்பட்ட மிகவும் கொடிய தீவிவரவாத தாக்குதல்களில் ஒன்றான, அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் நடத்திய இரட்டை தற்கொலை தாக்குதலில் குறைந்தது 127 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.

 

இந்த மோசமான தாக்குதல் நடைபெற்ற சில நாட்களுக்கு பின்னர், இந்த இஸ்லாமிய குடியரசில் வாழும் மத சிறுபான்மையினரின் குறைகள் விசாரிக்கப்படும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Add new comment

7 + 4 =