கிறிஸ்தவ ஆளுநருக்கு எதிராக வெறுப்பு பேச்சு – இசையமைப்பாளர் சிறை செல்வாரா?


ஜகார்த்தாவின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுகின்ற கூற்றை வெளியிட்டதால் இசையமைப்பாளர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று இந்தோனீிய அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

 

அகோக் என்று அறியப்படும் முன்னாள் ஆளுநரை இலக்கு வைத்து டிவிட்டர் வழியாக வெறுப்புணர்வை பேச்சை பரப்பியதால் இசையமைப்பாளர் அகமத் தானி பிராசெட்யோவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் கோரியுள்ளனர்.

 

2017ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் பரப்புரை நடைபெற்று கொண்டிருந்தபோது, “தெய்வ நிந்தனை செய்த அகோக்கை யாராவது கண்டால், அவரது முகத்தில் காறி துப்பவும் என்று டிவிட்டரில் இந்த இசையமைப்பாளர் பதிவிட்டிருந்தார்.

 

புனித குரானை நிந்தித்தாக 2017ம் ஆண்டு மே மாதம் அகோக் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது. .

Add new comment

6 + 13 =