கிறிஸ்தவர்களை சந்தேகப்படாமல் இருக்க மின்டணாவோ கர்தினால் அழைப்பு


பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியில் முஸ்லிம் தன்னாட்சிப் பிரதேசத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கிறிஸ்தவர்களை கோடாபாடோ உயர் மறைமாவட்ட கர்தினால் ஓர்லாண்டோ குயேவெடோ கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

மின்டணாவோ மக்களுக்கு இழைத்துள்ள வரலாற்று அநீதியை நிவர்த்தி செய்வதாக இந்த நடவடிக்கை அமையும் என்று அவர் கூறியுள்ளார்.  

 

மோரோ மக்கள் புதிய அரசியல் நுழைவாக உருவாகுகின்ற இந்த சட்டத்தை நிராகரிக்க இந்த பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள் பலர் விரும்புவது துரதி்ஷ்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

மோரோ மக்களுக்கு புதிய அரசியல் நுழைவ வழங்குகின்ற சட்டத்தை நிராகரிக்க இந்த பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள் பலர் விரும்புவது துரதி்ஷ்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த பகுதிக்கு அதிக தன்னாட்சி உரிமையையும், வலுவான பிரதேச அரசையும், நாடாளுமன்றத்தையும், நீதி அமைப்பையும் வழங்கும் இந்த சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே கையெழுத்திட்டார்.

 

இந்த பிரதேசத்தில் அவுல்-அவாய், சுலு, பாசிலான், மாகுன்டாணாவ் மற்றும் லனாவ் டெல் சுர் ஆகிய மாகாணங்கள் உள்ளடங்குகின்றன.

 

இந்த பகுதியோடு இணைக்கப்படுவதற்கு லனாவ் மெல் நோர்டோ மாகாணத்தின் 6 நகரங்கள், கோடாபாடோவிலுள்ள 39 கிராமங்கள், இசபெல்லா மற்றும் கோடாபோடோ நகரங்களின் வாக்காளர்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி அனுமதி பெற வேண்டியுள்ளது.

 

முஸ்லிம்களுக்கு எதிரான ஆழமான முன்சார்பு எண்ணங்கள் மற்றும் பொதுவான வதங்திகளால் மின்டணாவிலுள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த முன்மொழிவுக்கு எதிராக இருப்பதாக கர்தினால் குயேவிடோ கூறியுள்ளார்.

 

Add new comment

1 + 0 =