காவல் நிலையத்தில் பெற்ற நற்சான்றிதழை ஆன்லைனில் பெற வசதி


காவல் நிலையங்களுக்கு சென்று பெறப்பட்டு வந்த நற்சான்றிதழை ஆன்லைனிலேயே எளிதாகப் பெறுவது நடைமுறைக்கு வந்துள்ளது.

 

தனியார் நிறுவனங்கள், குழும நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளில் பிறரை குடியமர்த்துவது, பாதகாப்பு பணியாளர் வேலை, தனியார் வங்கிகளில் வேலை என எல்லாவற்றிலும் வேலைக்கு அமர்த்துவதற்கு முன்னர், அந்த நபரின் நன்னடத்தை உள்ளவரா என அறிந்துகொள்ளவும், குற்றவாளிகளுக்கு வேலை கொடுக்காமல் தவிர்க்கவும் விசாரிப்பதற்கு என்று ஒரு உள்ளது.

 

காவலர் நற்சான்றிதழை தங்களுடைய சான்றிதழுடன் விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டும் என்பதுதான் அந்த நடைமுறை உள்ளது.

 

இவ்வாறான நற்சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்தால், அவர்களை பற்றி விசாரித்து ரூ. ஆயிரம் வாங்கிவிட்டு நற்சான்றிதழை தருகின்ற நிலை இதுவரை உள்ளது.

 

பொதுமக்களின் பின்னணி தகவல்களை காவல் நிலையத்திலேயே சரிபார்க்கின்ற சேவை கிடைக்கும் என்பதால், விரைவில் இணைய வாயிலாக இந்த நற்சான்றிதழை பெற முடியும் என தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.

Add new comment

2 + 6 =