காவல்துறையில் அவமதிப்பு – முதல் திருநங்கை போலீஸ் தற்கொலை முயற்சி


ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான திருநங்கை நஸ்ரியா தற்கொலைக்கு முயற்சித்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது  

 

கடும் சிரமங்களுக்கு இடையெ பல்வேறு புறக்கணிப்புககளையும் மீறி தமிழகக் காவல்துறையில் 2017ம் ஆண்டு சோந்தார்.  

 

முதல் திருநங்கை காவலரான அவருக்கு ராமநாதபுரம் ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக்காவலராக பணி கிடைத்தது.

 

ஆனால் சக காவலர்கள், மேலதிகாரிகளால் அதிகார போக்கால் ஒவ்வொரு நாளும் அவமானத்தை சந்திக்கவேண்டி வந்துள்ளது.  

 

நாளாக ஆக அதை்து வதைகளும் அதிகரிக்கவே, தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி, மேலதிகாரிகளிடம் புகார் தெரிவித்து கண்டுகொள்ளப்படாமல் அனைத்தையும் சகித்து வந்துள்ளார்.

 

ஆயுதப்படை சீனியர் எழுத்தர், எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படை ஆய்வாளர் ஆகியோர் தன்னுடைய ஒழுக்கம், கண்ணியம் பற்றி மனம் நோகும்படி தொடர்ந்து விமர்சித்து வந்ததால், மனவருத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக நஸ்ரியா கூறியுள்ளார்.

 

தனது தற்கொலை முயற்சியை வாட்ஸ் அப்பில் காணொளியாக வெளியிட்ட நஸ்ரியா, தன்னுடைய இந்த முடிவுக்கு இந்த மூவருமே காரணம் என்றும், எலி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொள்வதாக கூறுவதாக தெரிகிறது.

 

சக காவலர்களால் காப்பாற்றப்பட்ட நஸ்ரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறியுள்ளார்.

 

அரசு பணியில் திருநங்கைகளுக்கு இவ்வளவு அவமதிப்பு எனறால், வேறு இடங்களில் சொல்லவும் வேண்டுமோ என்கிறார்கள் விமர்சகர்கள்.

Add new comment

8 + 3 =