காலம் கடந்து செல்கிறது, கடவுளின் அன்பு தொடர்கிறது – திருத்தந்தை


ஒராண்டு முடிவுற்று இன்னொரு புதிய ஆண்டு தொடங்குகிற வேளையில், கடந்த செல்லும் ஆண்டு பற்றியும், அந்த காலத்தில் வழங்கப்பட்ட அன்பு பற்றியும் சிந்திக்க மக்களை தூண்டப்படுகிறார்கள் என்று திருத்தந்தை பிரானசிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

புனித பேதுரு பேராயலத்தில் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய மாலையில் செப வழிபாடு நடத்திய திருத்தந்தை இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

 

அப்போது வழங்கிய சிறியதொரு மறையுரையில், தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய 4ம் அதிகாரம் 4 - 5ம் வசனங்களில் வருகின்ற “ஆனால், காலம் நிறைவுற்றபோது, நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டுக்கொள்வதற்காக, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவராகவும் அனுப்பினார்” என்பதை விளக்கியபோது திருத்தந்தை பிரான்சிஸ் இந்த கருத்தை கூறியுள்ளார்.  

 

புதிய ஏற்பாட்டின் சுருக்கம் இந் பகுதி எனவும், ஓராண்டு கடந்து செல்கையில் முக்கிய தருணத்தின் பொருளை  இந்த பகுதி சுட்டிக்காட்டுவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

காலம் கடந்து செல்கிறது. கடவுளின் அன்பு தொடர்கிறது என்பதை இது பொருள்படுத்துவதாக திருத்தந்தை பிரானசிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Add new comment

1 + 4 =