காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்


இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் 88 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

 

1974ல் நடைபெற்ற தொழிற்சங்கப் வேலைநிறுத்தத்தால் அப்போதைய தலைமையமைச்சர் இருந்த இந்திரா காந்தியை பெரும் நெருக்கடி கொடுத்தவராக பெர்ணான்டஸை கூறுகின்றனர்.

 

இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு நாடு உருவாக வேண்டுமென ஆதரித்த அரசியல் தலைவர்களில் இவர் ஒருவராவார்.

 

அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான கூட்டணி அரசில் பாதுகாப்பு அமைச்சராக இவர் பதவி வகித்தார்.

 

வயதானபோது, அல்சைமர்ஸ் என்னும் ஞாபகமறதி நோயல் அவர் பாதிப்பப்பட்டார்

 

முன்னாள் தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவசர நிலையை செயல்படுத்தியபோது, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இவர் சென்னை சென்றதாகவும், அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி பாதுகாப்பு அளித்ததாகவும் பெர்ணான்டஸ் இதற்கு முன்னதாக பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

2 + 2 =