கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு தெரிவித்த சுதர்சன் நாச்சியப்பன்


காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை சுதர்சன நாச்சியப்பன் காரைக் குடியில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாததால் சுதர்சன நாச்சியப்பன் அதிருப்தியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் சந்திக்கின்றனர்.

 

எனவே, இந்த காலக்கட்டத்தில் ராகுல் காந்தியை தலைமையமைச்சராக்குவதே நோக்கம் என்றார்.

 

மக்களின் துன்பங்களை அகற்றுகின்ற ஆட்சி மத்தியில் வர வேண்டும். அந்த நோக்கத்தில் இருந்து திசை திருப்ப முயற்சிப்போருக்கு எதிராகதான் இந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

Add new comment

10 + 5 =