காந்தப்புலம் மாற்றமடையும் பூமியின் வட துருவம்


பூமியின் வட துருவத்தில் காந்தப் புலம் விரைவாக மாற்றம் பெறுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 

7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியின் காந்தப் புலங்கள் தலைகீழாக மாறின எனக் கூறப்படுகிறது.

 

மீண்டும் இப்போது காந்தபுலம் தலைகீழாகி வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

பூமிப் பந்தின் வட துருவத்தின் காந்தப்புலம் தொடர்ந்து நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

 

1881ஆம் ஆண்டு வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது தொடங்கி, ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம்பெயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  

 

காந்தப்புலம் நகரும் வேகம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிகரித்து, ஆண்டுக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வரை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதன் காரணமாக திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

எனவே, கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் பொருத்தப்பட்டு்ளள திசைகாட்டி கருவிகளை மேம்படுத்தி பொருத்த வேண்டி அவசியம் ஏற்பட்டு்ளளது. .

 

2020ஆம் ஆண்டு உலக காந்த திசைக்காட்டி மாதிரியின் ஐந்தாண்டுக்கு புதுப்பிக்கப்படும்.

 

அமெரிக்காவின், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்தான் வட காந்தப்புல நகர்வை தொடர்ந்து கண்காணித்து, புதுப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Add new comment

7 + 13 =