Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
காதலரை கரம் பிடிக்க அரச குடும்ப தகுநிலையை உதறிய இளவரசி
Friday, November 02, 2018
ஜப்பானின் சாமானியக் குடிமகனான தன்னுடைய காதலரைக் கரம் பிடிப்பதற்காக அரச குடும்ப தகுநிலையை உதறி தள்ளிவிட்டுள்ளார். ஜப்பான் இளவரசி அயாகோ.
ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினர் டகாமாடோ. டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ, நிப்பான் யூசென் கப்பல் நிறுவனத்தில் பணிபுரியும் கேய் மோரியா மீது காதல் கொண்டார்.
சாமானியக் குடிமகனைத் திருமணம் செய்துகொள்ள இளவரசிகள் விரும்பினால் அரச குடும்பத்திலிருந்து அவர்கள் வெளியேறிவிட வேண்டும் என்பது ஜப்பான் அரச குடும்பத்தின் விதிமுறைகளில் ஒன்றாகும்.
காதலே பிரதானம் என்று உறுதியாக நினைத்த அயாகோ, ஜப்பான் அரச குடும்ப விதிமுறையைப் பின்பற்றி அரச குடும்பத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்.
டோக்கியோவில் மெய்ஜி திருத்தலத்தில் திங்கள்கிழமை நடந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு இந்த காதல் மணமக்களை வாழ்த்தினர்.
Click to share
Add new comment