காசா விவகாரம் – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகல்


இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் லீபர்மென் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

 

காஸாவிலுள்ள பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களோடு நடைபெறும் 2 நாள் போரை முடித்து கொள்ள போர்நிறுத்தத்தை ஏற்றுகொள்வதாக அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

 

அமைச்சரவையின் இந்த முடிவு பயங்கரவாதத்திடம் சரணடையும் நடவடிக்கை என்று அவர் விமர்சித்துள்ளார்.

 

இவருடைய இந்த ராஜிநாமாவால் ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் மிக சிறிய பெரும்பான்மையுள்ள கட்சியாக மாறியுள்ளது.

 

ஹமாஸ் குழுவோடு நீண்டகால போர்நிறுத்தம் செய்ய முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் லீபர்மென் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த வார தொடக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பாலஸ்தீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லீபர்மெனின் இந்த பதவி விலகல் ஆளும் கட்சிக்குள் இருக்கும் அதிகார மோதலை காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Add new comment

2 + 10 =