காங்கோ தொடர்வண்டி விபத்தில் 24 பேர் பலி


ஆப்பிரிக்க கண்டத்தில் மத்தியில் இருக்கும் காங்கோ நாட்டில் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில், 24 பேர் பலியாகினர்.

 

காசை மாகாணத்திலுள்ள பினா லேகாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 24 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

 

20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

 

இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக காங்கோ அரசு கூறியுள்ளது.

 

ஒரு மாதத்தில் காங்கோவில் நிகழும் மூன்றாவது தொடர்வண்டி விபத்து இதுவாகும்.

 

இதற்கு முன்னதாக கேலண்டாவில் ஏற்பட்ட தொடர்வண்டி விபத்தில் 5 பேர் இறந்தனர்.

Add new comment

2 + 8 =