காங்கோவில் எபோலா தாக்குதல் – 370 பேர் பலி


மத்திய ஆப்பிரிக்க நாடாக இருக்கும் காங்கோவில் எபோலா வைரஸ் பரவியதன் காரணமாக இதுவரை 370 பேர் பலியானதாக  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

'காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் பரவல் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தற்போது 360-ஐத்  தாண்டியுள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து்ளளது.

 

எபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்ட 685 பேரில் 636 பேருக்கும் நோய் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டது.

 

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 245 பேருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

எபோலா வைரஸ் பரவலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்கள், பரப்புரையக் மற்றும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவது தொடர்வதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.

Add new comment

4 + 4 =