காங்கிரஸின் பொதுச் செயலாளரானார் பிரியங்கா காந்தி


டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக பிரியங்கா புதன்கிழமை பொறுப்பேற்றார்.  

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்காவை அக்கட்சியின் அனைத்திந்திய இந்திய பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமித்திருந்தார்.

 

மேலும், மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு உத்தரபிரதேசத்தில் காங்கிரசை பலப்படுத்தும் வகையில் இந்த மாநில கிழக்கு பகுதி செயலாளர் பொறுப்பும் பிரியங்காவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் போட்டியிட்டது.

 

ஆனால், இந்த கூட்டணி பெரும் தோல்வி அடைந்தது.

 

ஆனால், வரும் மக்களவை தேர்தலில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷூம், பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதியும் கூட்டணி ஏற்படுத்தி கொண்டனர்.

 

போனால் போகட்டும் என்று காங்கிரஸை கலந்து ஆலோசிக்காமல் அந்த கட்சிக்கு வெறும் இரண்டு தொகுதிகளை வழங்க எண்ணியுள்ளதாக அறிவித்தனர்.

 

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் தனித்தே போட்டியிட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

 

அதன் பின்னர்தான், பிரியங்கா காந்திக்கு புதிய பொறுப்பு வழங்கி, அனைவரின் அரசியல் கணக்கையும், மறு மதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயத்தற்கு காங்கிரஸ் கட்சி நிலைமையை மாற்றியுள்ளது.

Add new comment

15 + 3 =