கலைஞர் கரணாநிதியின் சிலை திறப்பு


சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் மறைந்த கலைஞர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி திறந்து வைத்தார்

 

அறிவாலயத்திலுள்ள அண்ணா சிலைக்கு அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை உள்ளது.

 

கலைஞரின் சிலை திறக்கப்பட்ட பின்னர். அரசியல் தலைவர்கள், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

 

அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஒய்எம்சிஏ மைதானத்திற்கு சென்றனா.

 

காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கூட்டத்தின் மேடையில் அமர்ந்திருந்தனர்.

 

ஒய்எம்சிஏ மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருந்ததோடு, அந்த பகுதியில் போக்குவரத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.

 

பல அரசியில் தலைவர்கள் மட்டுமன்றி, பல்வேறு துறையை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

 

அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, எதிரணயினர் கூடும் முக்கிய கூட்டமாக இந்த சிலை திறப்பு பார்க்கப்பட்டது.

Add new comment

10 + 5 =