கலிபோர்னிய காட்டுத்தீ: உதவும் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள்


கலிபோர்னிய மாநிலத்தில் காட்டுத்தீ தொடாந்து பரவி வரும் நிலையில், அருகிலுள்ள மாநிலங்களிலுள்ள உதவி நிறுவனங்களோடு இணைந்து கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் உதவி பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

 

முகாம் தீயால் வட கலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயால் பாரடைஸ் நகரத்தில் 29 பேர் பலியாகியுள்ளனர்.

 

இந்த காட்டுத்தீ 6,500 வீடுகளை அழித்து, இந்த மாநில வரலாற்றிலேயே பேரழிவு மிகுந்ததாக ஆகியு்ளளது.  

 

230 பேரை இன்னும் காணவில்லை என்று உள்ளூர் ஷெரிப் தெரிவித்திருக்கிறார்.

 

லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு மேற்கில் ஊல்சே தீயால் 370 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு 2 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

9 + 11 =