கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 44 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் ஏற்பட்டடுள்ள காட்டுத்தீ, அம்மாநில தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளிலுள்ள காடுகளையும், அருகிலிருக்கும் குடியிருப்புகளையும் சூழ்ந்து எரிந்து வருகிறது.

 

 

அமெரிக்காவில் கோடைக்காலத்தின்போது, சில மாநிலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழப்பது வழக்கமாகி வருகிறது.

 

புகை மூட்டம் காரணமாக தீயை அணைப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாகும்.

 

5 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் தீயில் எரிந்து கருகியுள்ளன.

15 ஆயிரத்து 500 வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

 

கடந்த 5 நாட்களாக காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

 

இன்னும் 228 பேரை காணவில்லை என்று தெரிவிக்க்ப்படுகிறது.

Add new comment

11 + 0 =