கர்நாடக அரசியலில் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு வாபஸ்


கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென இரு சட்டப்போரவை உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படடுள்ளது.

 

சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் எச் நாகேஷ், கேபிஜேபி கட்சியைச் சேர்ந்த ஆர். சங்கர் தங்களின் ஆதாரவை வாபஸ் பெறுகின்ற முடிவைக் கடிதம் மூலம் ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு தெரிவித்துள்ளனர்.

 

மும்பையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருக்கின்ற இவர்கள், பாரதிய ஜனதா கட்சி இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

 

தங்களின் 38 சட்டப்பேரவை உறுப்பினர்களும், தேசியக் கட்சியான காங்கிரஸின் ஆசியுடன் உள்ளதால், ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பில்லை என்று ஜேடிஎஸ் கட்சியின் தேவகௌடா கூறியுள்ளார்.  .

 

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு தற்போது 104 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. ஆட்சி அமைக்க 113 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Add new comment

9 + 1 =