கரையை கடக்கும் கஜா புயல்


வங்கக்கடலில் உருவாகி இருக்கும் கஜா புயல் நவம்பர் 15 வியாழக்கிழமை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 790 கி.மீ. தூரத்தில் உருவாகியுள்ளது.

 

தென்மேற்கு திசையில் நகர்ந்து வரும் இது வியாழன் பிற்பகலில் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையைக்கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

 

அந்ரேத்தில் தஞ்சை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீ வேகத்திலும் வீசலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

மீனவர்கள் வரும் 15-ம் தேதிவரை கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

ஓரளவ மழை பெய்தாலும் சென்னைக்கு நேரடியாக புயலால் பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

5 + 2 =