கருக்கலைப்பு சட்டபூர்வமானால் முடிதுறக்கும் இணை இளவரசரான ஆயர்


அன்டோரா என்ற நாட்டில் கருக்கலைப்பு சட்டபூர்வமானால் இணை இளவரசராக இருக்கும் கத்தோலிக்க ஆயர் ஒருவர் அந்த தகுநிலையில் இருந்து நீங்கிவிடுவார் என்று வத்திக்கான் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவது கொள்கையானால் நாட்டின் மாநில தலைவராக இருந்து வரும் உர்கெல் ஆயர் அந்த பதவியில் தொடரமாட்டார் என்று திருத்தந்தை பிரான்சிஸே தொலைபேசியில் தலைமையமைச்சர் டோனி மார்தியிடம் தெரிவித்தாக பிரான்ஸின் பிலியு செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஆனால், உள்ளூர் ஊடகங்கள் வத்திகான் தலைமையமைச்சர் மார்தியை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளன.

 

ஒரு நூற்றாண்டு பழமையான பாரம்பரிய ஏற்பாட்டில், ஆயர்  உர்கெலும் பிரான்ஸின் அதிபரும் அந்நாட்டின் இணை இளவரசர்களாக உள்ளனர்.

 

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனியன் மலைகளின் எல்லையில் இந்த நாடு உள்ளது.

 

1993ம் ஆண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த இரண்டு இணை இளவரசர்களாலும் சட்டங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேண்டும் என்றும் நியதி அங்கு இருந்து வருகிறது.

 

அருகிலுள்ள நாடுகளில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக இருப்பதுபோல, தங்கள் நா்ட்டில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க அங்குள்ள பெண்கள் விரும்புகின்றனர்.

 

பெண்ணிய செய்ற்பாட்டாளாகள் தங்களின் நாட்டிலும் கருக்கலைப்பு சட்டபூாவமாகக்ப்பட வேண்டும் என்று வலுவாக குரலெழுப்பி வருகின்றனர்.

 

1990ம் ஆண்டு பிரான்ஸ் இணை இளவரசர் கையெழுத்திட்டும், பாப்பிறை இணை இளவரசர் கையெழுத்து இடாமலும் விவாகரத்து சட்டம் செயல்படுத்தப்பட்டதைபோல, இந்த கருக்கலைப்பு சட்டம் இயேற்றப்படலாம் என்று இந்த விவகாரம் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

 

ஆனால், இந்த மாதிரியான கருக்கலைப்பை சட்டமாக்கும் முயற்சிகள் நடைபெற்றால், பாப்பிறை இணை இளவரசாராக இருக்கும் ஆயர் அந்த பொறுப்பில் இருக்க மாட்டார் என்று வத்திக்கான் தெளிவாக கூறியுள்ளது.  

Add new comment

6 + 2 =