கருக்கலைப்புக்கு பொது நிதி ஆதரவை நிறுத்தியதற்கு பாராட்டு


மேற்கு வெர்ஜீனிய மக்கள் பொது நிதியை கருக்கலைப்புக்கு வழங்குவதை நிறுத்தி, தாங்கள் வாழ்வை வணங்குகின்ற கலாசாரம் உடையவர்கள் என்று காட்டியுள்ளதாக பால்டிமோர் உயர் மறைமாவட்ட பேராயர் வில்லியம் லோரி பாராட்டியுள்ளார்.

 

பயணம் மேற்கொண்டு சார்ல்ஸ்டன் மறைமாவட்டத்தின் பாப்பிறை நிர்வாகியாகவும் இவர் செயலாற்றி வருகிறார்.

 

அரசியல் சாசனம் அல்லது கருக்கலைப்பை பாதுகாக்கும் உரிமை எதுவும் பொது நிதி ஆதரவுடன் நடத்தப்பட வேண்டியதில்லை என்ற சீர்திருத்தம் ஒன்றுக்கு வாக்காளர்கள் அமோக ஆதரவு தெரிவித்திருந்தனர்.

 

இந்த திருத்தத்திற்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் மேற்கு வெர்ஜீனிய மக்கள் தாங்கள் வாழ்க்கையின் பக்கம் இருப்பதை சட்டம் இயேற்றுவோருக்கு தெரிவித்துள்ளனர் என்று இந்த பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் மூலம் பல ஆண்டுகளான கருக்கலைப்புக்கு நிதி ஆதரவு அளித்து 35 ஆயிரத்திற்கு அதிகமான இறப்புகளுக்கு காரணமாக இருப்பதை இவர்களின் ஒட்டுமொத்த குரல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

வாழ்க்கையை வணங்குகின்ற கலாசாரத்தை வெளிக்காட்டும் விதமாக மலைபாங்கான இந்த மாநிலம் திகழ்வதாகவும் இந்த பேராயர் கருத்து தெரிவித்துள்ளார்.    

Add new comment

13 + 5 =