கருக்கலைப்புக்கு அரசு நிதி வழங்க மறுப்பு


கருக்கலைப்புககு அரசு நிதி வழங்குவதை ரத்து செய்து அமெரிக்காவின் இரண்டு மாநிலங்கள் தங்களின் அரசியல் சாசனத்ததை திருத்தியுள்ளன.

 

மேற்கு வெர்ஜீனியா மற்றும் அலாபாமாவில் இந்த அரசியல் சீர்திருத்தம் ஏற்கபட்டுள்ள நிலையில், இதே மாதிரியான நடவடிக்கை ஒரேகான் மாநிலத்தில் தோல்வியடைந்துள்ளது.

 

“கருக்கலைப்பு சீர்திருத்துக்கு உரிமையில்லை” என்றும் அறியப்படும் இந்த சீர்திருத்தம் ஒன்று 52 சதவீத மேற்கு வெர்ஜீனிய வாக்காளர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு்ள்ளது.

 

அலாபாமாவில் இந்த சீர்திருத்தம் 59 சதவீத மக்களின் ஆதரவோடு வெற்றிபெற்றிருக்கிறது.

 

பிறக்காத குழந்தைகளின் புனிதத்தை மதித்து ஏற்று கொண்டு, பிறக்காத குழந்தைகளின் உரிமைகளையும் அனைத்து நடத்தை மற்றும் சரியான, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் வாழ்க்கை உரிமை வழங்கப்பட இதன் மூலம் அரசியல் சாசன பாதுகாப்பு வழங்கப்படுகிறது.  

Add new comment

1 + 16 =