கராச்சியில் துணை தூதரகத்தில் தாக்குதல், 4 பேர் பலி


பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள சீனத் துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

 

அங்கு குண்டுவெடிப்பும், துப்பாக்கிச்சூடும் நடைபெற்றதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தோர் கூறியுள்ளனர்.

 

காலை 9.30 மணிக்கு தூதரகத்தினுள் நுழைய முயன்ற 4 துப்பாக்கிதாரிகள், பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.

 

பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளால் இத்தாக்குதல்  நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

 

தூதரக வளாகத்தில் இந்த தீவிரவாதிகள் நுழைந்து விட்டாலும், கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்னால் சுட்டு கொல்லப்படடார்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

சீனாவின் நட்பு நாடாக சீனா விளங்கி வருகிறது.

Add new comment

2 + 15 =