கப்பலில் தீ விபத்து – 14 பேர் உயிரிழப்பு


ரஷ்யா-உக்ரைன் கடல் பகுதியில் இரண்டு கப்பல்கள் பயணித்தபோது தீ விபத்து ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

15 இந்திய மாலுமிகள் உட்பட பலர் அந்த கப்பலில் பயணித்தனர்.

 

தான்சானியாவை சேர்ந்த கேன்டி மற்றும் மேஸ்ட்ரோ ஆகிய இரண்டு கப்பல்கள், ரஷ்யா-உக்ரைன் கடல் பகுதியில் கெர்ச் ஜலசந்தியில் சென்றுகொண்டிருந்தன.

 

ஒரு கப்பல் சமையல் எரிவாயுவையும் மற்றொரு கப்பல் எண்ணெய்யையும் ஏற்றிச்சென்றன.

 

எரிபொருளை மாற்றியபோது தீ பற்றியதால், அந்தக் கப்பலில் இருந்த பொருட்கள் வெடித்து சிதறின.

 

மாலுமிகள் சிலர் கடலுக்குள் குதித்து உயிர் தப்பினர். சிலர் களமிறங்கியுள்ளது.

 

12 பேரை கடலில் இருந்து மீட்டுள்ளதாகவும் சிலரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Add new comment

14 + 0 =