கத்தோலிக்க மதக்குருக்களை தாக்குவோருக்கு பிலிப்பீன்ஸ் அதிபர் எச்சரிக்கை


கத்தோலிக்க ஆயர்களையும், அருட்தந்தையரையும் தாக்குவோருக்கு எதிராக பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

நாட்டிலுள்ள ஆயர்கள் தேவையில்லாத முட்டாள்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று தெரிவித்த பின்னர், அவர்களை தாக்குவோருக்கு எதிரான இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

 

அதிபரின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருப்போர் அதிபரின் நிர்வாகத்தையும், கொள்கைகளையும் விமர்சிக்கிற ஆயர்களையும், அருட்தந்தையரையும் மிரட்டியாதாக கூறப்பட்ட பின்னர் இந்த எச்சரிக்கையை டுடெர்டே விடுத்துள்ளார்.

 

அருட்தந்தையரை தொடக்கூடாது. அரசியலில் அவர்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று தெரிவித்துள்ள அதிபர் டுடெர்டே அவர்களை காயப்படுத்த முயல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளார்.

 

அவர்களை விட்டுவிடுங்கள். என்னோடு விடயங்களை கையாளுங்கள் என்று அவர் பிப்ரவரி 24ம் தேதி பிலிப்பீன்ஸின் மத்திய பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் பேசியபோது தெரிவித்தார்.

 

கடந்த இரண்டு வாரங்களாக தனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதை காலூகாக் மறைமாவட்ட ஆயர் பாப்லோ விர்கிலியோ பிப்ரவரி 26ம் தேதி அளித்த பேட்டியில் உறுதி செய்தார்.

 

போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் என்று சந்தேகப்படுவோர் கொல்லப்படும் களமாக இருக்கின்ற இந்த மறைமாவட்டத்தின் இந்த ஆயர், இந்த கொலை மிரட்டல் விடுப்போர் யார்? எங்கிருந்து வருபவர்கள்? என தனக்கு தெரியாது என்று தெரிவித்திருக்கிறார்.

Add new comment

12 + 4 =