கத்தோலிக்க பெண்கள் அமைப்புக்கு விருது வழங்கிய இந்தோனீஷியா


சமூகத்தில் வேற்றுமைகளை பராமரித்து, பாதுகாப்பதில் பெரும் பங்காற்றிய தேசிய கத்தோலிக்க பெண்கள் நிறுவனத்திற்கு இந்தோனீஷிய அரசு விருது வழங்கி கொளரவித்துள்ளது.

 

நீண்டகாலம் வாழ்நாள் சாதனை வரையறையில் இந்தோனீஷிய குடியரசுக்கான கத்தோலிக்க பெண்கள் நிறுவனத்திற்கு 2018 சிறந்த வெகுஜன நிறுவன விருது வழங்கப்பட்டுள்ளது.

 

சுகாதாரம், கல்வி, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறுபட்ட தளங்கில், தேசிய இறையாண்மை பாதுகாப்புக்கு உழைத்ததற்காக இந்த விருது வழங்க்பபட்டுள்ளது.

 

1924ம் ஆண்டு நிறுவப்பட்ட சுயாதீன சமூக நிறுவனமாக இந்தோனீஷிய குடியரசுக்கான கத்தோலிக்க பெண்கள் நிறுவனம் உருவானது.

 

மக்களின் நலவாழ்வு மற்றும் மனித மாண்புக்காக பணிபுரிந்து வருகினற் இந்த நிறுவனத்தில் 90 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

 

இந்தோனீய உள்துறை விவகார அமைச்சகத்தால் இந்த ஆண்டு கௌரவிக்கப்பட்ட 15 வெகுஜன நிறுவனங்களில் ஒன்று இந்தோனீஷிய குடியரசுக்கான கத்தோலிக்க பெண்கள் நிறுவனமாகும்.

Add new comment

6 + 11 =