கடும்போக்குவாதிகளால் ஏற்பட்ட காயங்களை போக்க நினைக்கும் மத்திய பிரதேசம்


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள இந்திய காங்கிரஸ் கட்சி, பல்சமய உரையாடல் மற்றும் இந்துக்களால் உருவாக்கபப்டும் வன்முறையை கட்டுப்படுத்த ஆன்மிக அமைச்சகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

 

கிறிஸ்தவாகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு இந்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள காயங்களை போக்குவதற்கான முயற்சிகளில் மாநில அரசு மேற்கொள்ளும் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

 

இந்து மத சார்பான பாரதிய ஜனதா கட்சியை தோல்வியுற செய்து ஆட்சியமைத்திருக்கும் இந்திய தேசிய காங்கிரஸின் இந்த நடவடிக்கையை மத சிறுபான்மை தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

 

முன்னதாக 15 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியால் ஆளப்பட்டு வந்த மத்திய பிரதேசத்தில், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான நூற்றுக்கு மேலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 

பல்சமங்களுக்கு இடையில் இணக்கத்தையும், மத சகிப்புத்தன்மையையும் வலுப்படு்த்தும் நோக்கில் அமைச்சகம் ஒன்றை உருவாக்கப் போவதாக முதலமைச்சர் கமல் நாத் அறிவித்துள்ளார்.

Add new comment

7 + 10 =