கடுங்குளிரில் உறையும் அமெரிக்கா, 8 பேர் உயிரிழப்பு


துருவ சுழற்சி என்று அறியப்படுகின்ற கடும் பனிப் பொழிவால் நிலவும் கடும் குளிரால், அமெரிக்காவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அமெரிக்காவின் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரிக்கு மேலான செல்ஷியஸ் தட்ப நிலையும் நிலவி வருகிறது.

 

250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த கடுங்குளிர் பருவநிலையை அனுபவிக்கின்றனர்.

 

ஆனால், புளோரிடா போன்ற தெற்கு மாகாணங்கள் இந்த இந்தப் பேரிடரில் இருந்து தப்பின.

 

சிக்காகோவில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை தட்பவெப்பநிலை நிலவலாம் என்று கணிக்கப்பட்டது.

 

இந்த வார இறுதியில், இந்த நிலைமை மாறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

 

அண்டார்டிக்கா மற்றும் எவரெஸ்ட் சிகரத்தின் தட்பவெப்பநிலையை விட குறைவான வெப்பநிலை அமெரிககாவின் சில பகுதிகளில் நிலவலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Add new comment

14 + 0 =