கடிந்துரைத்த பின் திருச்சபை தலைவர்களோடு உரையாட விரும்பும் டுடெர்டே


பிலிப்பீன்ஸ் தலைவர்களோடு மனம் திறந்து பேசுவதற்கு அந்நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தயாராக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

 

மக்கள் ஆயர்களை கொலை செய்து, கொள்ளையடிக்க வேண்டும் என்று அதிபர் அழைப்புவிடுத்த திருச்சபை தலைவர்கள் மீதாக இன்னொரு கடிந்துரைப்புக்கு பின்னர் இந்த செய்தி வந்துள்ளது.  

 

டுடெர்டே அரசு நடத்தி வருகின்ற போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் குறைந்தது 20 ஆயிரம் பேரை கொன்றுள்ளதை விமர்சிக்கும் திருச்சபை தலைவர்களை நீண்ட காலமாக அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

 

கத்தோலிக்க அருட்தந்தையரும், ஆயர்களும் ஊழல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்ததாக அதிபர் டுடெர்டே தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

 

நாட்டுக்கு நன்மை பயக்கும் எது பற்றியும் பேசுவதற்கு அதிபர் தயாராக இருப்பதாக அதிபரின் வழக்கறிஞராகவும் இருக்கின்ற செய்தி தொடர்பாளர் கால்வாடோர் பாநிலோ தெரிவித்திருக்கிறார்.

Add new comment

4 + 2 =