கடற்படை மோதலுக்கு பின், போர் பற்றிய அச்சத்தில் உக்ரேனிய கத்தோலிக்கர்கள்


ரஷ்யா, உக்ரேனின் 3 கடற்படை கப்பல்களை கைப்பற்றி, அதிலிருந்த 24 ஊழியாகளை கைது செய்திருப்பதால் புதிதாக போர் உருவாகக்கூடும் என்று உக்ரேனிலுள்ள கத்தோலிக்கர்கள் பீதியில் உறைந்துபோய் வாழ்கின்றனர்.

 

2014ம் ஆண்டு ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்ட கிரைமியா பகுதியின் கடற்பரப்பில் நின்றிருந்த உக்ரேனின் 3 கடற்படை கப்பலை ரஷ்ய கடற்படை கைப்பற்றியதோடு, அதிலிருந்த 24 ஊழியர்களையும் கைது செய்தது.

 

இதனால், உக்ரேனில் பெரும் பதற்றம் ஏற்றப்பட்டது. ரஷ்யா, கிரைமியாவை இணைத்து கொண்டதை உலக நாடுகள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நேட்டோ படைகளை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் உக்ரேன் அதிபர் பெட்ரோ பேரோஷெங்கோ கோரிக்கை வைத்தார்.

 

ஆனால், பொதுவான கடற்பரப்பில் ஆத்திரத்தை கிளப்பும் வகையில் உக்ரேன்தான் முதலில் நடந்து கொண்டது என்று ரஷ்யா தெரிவித்தது.

 

ரஷ்யாவின் எல்லையை ஒட்டி இருக்கின்ற உக்ரேனின் கிழக்கு பகுதிகள் முழுவதும் சிறப்பு ராணுவ சட்டத்தை செயல்படுத்தும் முடிவையும் உக்ரேன் உடனடியாக எடுத்து அறிவித்துள்ளது.

 

இதனால், அங்கு புதிதாக போர் ஏற்படலாம் என்று பதற்றம் அதிகரித்திருப்பதால், அங்குள்ள கத்தோலிக்கர்கள் பீதி அடைந்துள்ளனர்.

 

திடீரென போர் தீவிரமடைந்தால் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில், உள்ளூர்வாசிகள் உணவுப்பொருட்களையும், தண்ணீர் மற்றும் மொழுவர்த்திகளையும் சேகரித்து பதுக்க தொடங்கியுள்ளதாக காரித்தாஸ் உக்ரேன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Add new comment

6 + 2 =