Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கஜா புயல் – ஒரு நாள் ஊதியம் வழங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
Monday, November 26, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒருநாள் ஊதியத்தை வழங்கவுள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் தாஸ் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாவட்ட மாநாடு கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல். உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற டிசம்பா் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Click to share
Add new comment