கஜா புயல் பாதிப்பு, 63 பேர் பலி, 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி கோரிக்கை


கஜா புயலின் நிவாரண நிதியாக இந்திய நடுவண் அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ் நாடு கோரிக்கை வைத்துள்ளது.

 

வியாழக்கிழமை டெல்லி சென்று இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

 

கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களின் விவரங்கள் பழனிசாமி மனுவாக அளித்துள்ளார்.

 

உடனடி நிவாரணம் வழங்க 1,500 கோடி ரூபாயும் சேதங்கள் முழுவதையும் எதிர்கொள்ள ஏதுவாக 15,000 கோடி ரூபாயும் இந்திய நடுவண் அரசிடம் கோரியுள்ளதாக இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,

 

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 82 ஆயிரம் பேரை முகாம்களில் தங்க வைத்ததால் பெரும் பேரழிவுகள் குறைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் செய்தியாளாகளிடம் தெரிவித்தார்.

 

கஜ புயல் காரணமாக இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இரண்டு லட்சத்து 75 ஆயிரம் குடிசை வீடுகள் உட்பட சுமார் 3 லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

 

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ள நினையில், 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களும் இந்தப் புயலில் வீழ்ந்துள்ளன. 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

செய்தியாளர் சந்திப்பில் 2008ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் வழங்கிய நிவாரண நிதியை ஒப்பிட்டு, தற்போதைய நிவாரணம் அதிகமாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, முதல்வர் அதிக கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

Add new comment

3 + 2 =