கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து


கஜா புயல் காரணமாக வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கஜா புயல் அதிகாலை 3.30 மணியளவில் நாகை, வேதாரண்யம் அருகே கரையை கடந்துள்ளது.

 

கஜ புயல் உருவான கடந்த சில நாட்களாகவே, அதன் திசை, வேகம், பாதை ஆகியவை பல்வேறு மாறுதல்களை சந்தித்த பின்னர் வியாழக்கிழமை இரவு கரையைக் கடக்கத் தொடங்கியது.

 

அப்போது கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 20செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

எனவே, பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமறை விடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகளும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Add new comment

14 + 0 =