கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரச முன்தயாரிப்பு


கஜா புயலை எதிர்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 தேசிய பேரிடர் மீட்பு குழு சென்றுள்ளன.

 

சென்னை அருகே அரக்கோணத்தில் இருந்து நாகைக்கு 3 குழுக்களும், சிதம்பரத்திற்கு 2 குழுக்களும் சென்றுள்ளன.

 

சென்னை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு குழு விரைந்துள்ளது.

 

புதுச்சேரி, காரைக்காலிலும் தலா ஒரு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 

பேரிடர் மீட்பு சாதனங்களுடன் அந்தந்த பகுதிகளுக்கு குழுக்கள் சென்றுள்ளதோடு, 24 மணிநேரமும் செயல்படும் கண்காணிப்பு மையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

Add new comment

5 + 8 =